Monday, October 26, 2009

மலத்தை மனிதனே அள்ளும் கொடுமை தீருமா..?



ச்சீ...ச்சீ... என்று மலத்தைப் பார்த்தவுடன் முகத்தைச் சுளித்தவாறு நகர்ந்து விடுவார்கள் பெரும்பாலான மனிதர்கள். ஆனால் அதையும் மனிதர்கள்தான் பெரும்பாலும் அள்ளிச் சென்று அப்புறப்படுத்தும் அவல நிலை உள்ளது. இத்தனைக்கும் கையால் மலம் அள்ளுவதை சட்டம் தடை செய்துள்ளது. 1993 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட கையால் மலம் அள்ளுவோர் பணி நியமனம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடங்கள்(தடுப்பு) சட்டம் சில மாற்றங்களை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் பெரும்பாலும் அந்தக் கொடுமை இன்னும் நடைமுறையில் உள்ளது.


மத்திய சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான துறையின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 6.7 லட்சம் மலம் அள்ளுபவர்கள் நாடு முழுவதும் உள்ளனர். இது 2003 ஆம் ஆண்டு தந்த புள்ளிவிபரமாகும். ஆனால் இதுவரை இதில் எத்தனை பேருக்கு மாற்றுப் பணிகள் தந்து மலம் அள்ளும் பணியிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளார்கள் என்ற விபரங்கள் இல்லை. உலர் கழிப்பிடங்கள் மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடங்களே இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தை நோக்கி மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அடிகளை எடுத்து வைப்பதில் முனைப்பு இல்லை.


2007 ஆம் ஆண்டுக்குள் இதை முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு லட்சுமணன் கோடு ஒன்றையும் போட்டது. கோடு அழிந்ததுதான் மிச்சம். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், மனிதக்கழிவை மனிதனே அள்ளும் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்து, அதில் ஈடுபடுபவர்களுக்கு மாற்றுப் பணிகள் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. 2006-07 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 11 ஆயிரத்து 691 பேருக்கு மாற்று வேலைகளுக்கான பயிற்சி தர 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்ற அறிவிப்பும் வெளியானது.


ஆனால் அடிப்படையான பிரச்சனையைத் தீர்க்காமல் மேற்பூச்சு வேலைகளால் எந்த பலனும் இல்லை. 2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்குப்படி, தமிழகத்தில் உள்ள 1.41 குடும்பங்களில் சுமார் 92 லட்சம் குடும்பங்களின் வீடுகளுக்குள் கழிப்பறைகள் இல்லை. சுமார் ஆறரை லட்சம் உலர் கழிப்பிடங்கள் உள்ளதாகவும் அந்தப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலர் கழிப்பிடங்கள் மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இருக்கும் வரையில் அதை அள்ளுவதற்கான ஆட்களைத் தேடும் நிலை நிற்காது.


இந்தியாவில் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் தண்டவாளங்களுக்கு நடுவில் கிடக்கும் மலத்தை அள்ளிச்சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். எது, எதற்கோ நவீன கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அசிங்கம் என்று கருதப்படும் மலத்தை அள்ளத்தான் கருவிகளைக் கண்டுபிடிக்க மாட்டேனென்கிறார்கள்.


இத்தகைய கொடுரங்களுக்கு எதிராக, வெறும் காகிதத்தில் இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துக என்ற அக்.27 பேரணி முழக்கம் ஆட்சியாளர்களின் காதுகளில் போர்ப்பறையாக ஒலிக்கவிருக்கிறது.

5 comments:

  1. Who is a scavanger? A man who carries the human excrea as head load is a scavanger. this is the definition given by sri Sathappa who is member of the commision for the removal of human scavanging. I wrote ashort story based on this and sent to a literary magazine of the ruling party in 1999.I am waiting for its publication......kashyapan.

    ReplyDelete
  2. Migavum varuthapadavendiya vetkapadavendiya செய்தி. நான் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன்னில் ஒரு பெண் மலம் அள்ளுவதை பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். அரசாகம் சட்டம் போடுவது பல வருடங்கள் ஆகும். மக்கள் ஆகிய நாம் ரயில் நிலையத்தில் நிற்கும் ரயில்லில் மலம் சிறுநீர் கழிப்பதை தவிர்க்கவும். நம்மால் முடிந்த சிறுய உதவி.

    ReplyDelete
  3. A painful truth. Manual scavenging needs to be stopped ! Govt has to think of ways to do this! We need science to help us on this. Proper job alternatives for the present folks employed in this job needs to be analysed. Probably our Govt thinks that this is a "shitty" job !! You see, this "essential need" does not fetch as much money as spectrum !!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தோழா!அவசியமான பதிவு....தொடரட்டும் உங்கள் பணி...

    ReplyDelete