Friday, February 19, 2010

வெந்த புண்ணில் பம்பரம் விடுகிறார்கள்!உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசோ இதைக் குறைப்பதற்காக வழிகளைக் கண்டறியாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வெந்த புண்ணில் பம்பரம் விடப்பார்க்கிறது. கடந்த ஆண்டிலிருந்து விலையை விட உருளைக்கிழங்கின் விலை 57.67 விழுக்காடு அதிகரித்துள்ளது. உரித்தால் கண்ணீர் வரவழைக்கும் வெங்காயத்தின் விலையைப் பார்த்தாலே கண்ணீர் விட வேண்டியுள்ளது. அரிசியும், கோதுமையும் எங்கே என்னைப் பிடியுங்கள் பார்க்கலாம் என்று மேலே, மேலே போய்க் கொண்டிருக்கின்றன.இத்தனைக்கும் தற்போது மத்திய அரசின் உணவுப் பொருட்கள் கிடங்குப் பணியாளர்கள் ஒன்றும் ஈயோட்டிக் கொண்டிருக்கவில்லை. அபரிமிதமான அளவில் உணவு தானியங்கள் கிடங்குகளில் பத்திரமாக இருக்கின்றன. தேவையொட்டிகூட மக்களுக்கு விநியோகிக்காத அளவுக்கு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். விலைவாசியை எப்படி கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது பற்றி ஆலோசிக்க அண்மையில் முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதற்குப்பிறகும் கூட கிடங்குகளில் உள்ள தானியங்கள் வெளியுலகைப் பார்க்க முடியவில்லை.அங்கு எலிகள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கின்றன. கிடங்குகளில் கிடக்கும் உணவு தானியங்களைக் குறைக்க என்ன வழி என்று யோசித்துப் பார்த்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடப்பாண்டில் கோதுமைக் கொள்முதலைக் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டு விட்டார்கள். கோதுமை அறுவடைக்காலம் என்பது இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாத வரையிலானதாகும். கொள்முதல் குறித்து இப்போதே ஆலோசனை செய்து விட்டார்கள். கடந்த ஆண்டின் அறுவடைக்காலத்தில் 2.53 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. வரும் காலத்தில் 2.40 கோடி டன்னை மட்டுமே கொள்முதல் செய்யப்போகிறது மத்திய அரசு.அதோடு, மத்திய அரசின் கொள்முதல் விலையை விட சந்தையில் விலை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மத்திய உணவுக்கழகத்திடம் கொடுக்காமலே போகும் ஆபத்தும் உள்ளது. இதனால் மத்திய அரசின் கொள்முதல் மேலும் சரியும் என்று கருதப்படுகிறது. இவ்வளவு பிரச்சனைகள் இருக்கையில் மத்திய விவசாயத்துறை அமைச்சரோ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எந்த இடையூறும் செய்யாதீர்கள் என்று பால்தாக்கரேயிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

5 comments:

 1. Price rise is not an economic phenomenon. Inflation is a device for income redistribution which works against ordinary people by transferring wealth from their pockets to vested interests.Such understanding is to be percolated to massees through simple writeups like yours. KUSELAN

  ReplyDelete
 2. price raise is the policy of the government.To siphyn the resourses to capitol they use this mechanism.Their Planing strategy itself is openly declares as such....kashyapan.

  ReplyDelete
 3. Leave aside the micro and macro economic philosophies - price raise is being badly handled by this Govt and there is no doubt about that. I do not even see any initiatives being taken to control the spiraling price raise!! May be the Govt is "praying" for some "miraculous" solution - who knows ??

  ReplyDelete
 4. It is ridiculous that BJP is shouting against price rise because these Punyawans only had opened doors for speculative commodity markets by enacting legislation for the same during their rule.

  ReplyDelete
 5. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete