Friday, January 7, 2011

எந்திரன் வெற்றியா.. தோல்வியா..? ரஜினி குழப்பம்


முன்பெல்லாம் படம் வெளியாகி 50 நாட்கள், 75 நாட்கள், 100 நாட்கள் என்று தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்படும். வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக இருக்கும். வெற்றிப்படமாக இருந்தால் கிட்டத்தட்ட அந்த 175 நாட்களையும் விழாக்காலமாக ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.
மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் என்று பலரும் சொல்லிக் கொள்ளும் எந்திரன் பல திரையரங்குகளில் இருந்து வெளியேறிவிட்டது. ரசிகர்கள் மூலம் இந்தத் தகவலைத் தெரிந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், திரைப்படத்துறையின் களஞ்சியம் என்று அழைக்கப்படும் பிலிம் நியூஸ் ஆனந்தனின் தொலைபேசி எண்களைத் தட்டியிருக்கிறார்.

திரையிடப்பட்ட அரங்குகளில் இன்னும் எத்தனை அரங்குகளில் எந்திரன் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற விபரங்களை அவரிடம் கேட்டிருக்கிறார். பிலிம் நியூஸ் ஆனந்தனின் பதிலை வைத்து ரஜினியின் ஆய்வு தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், திரைப்பட வட்டாரங்களில் எந்திரன் தயாரிப்புக்கும், விளம்பரத்திற்கும் செய்த செலவோடு ஒப்பிட்டால் படம் தோல்விதான் என்று பேசிக் கொள்கிறார்கள். அதுவும் யதார்த்தமான கதையைக் கொண்ட மைனாவின் வெற்றியைப் பார்த்தால், எந்திரன் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்கிறார்கள்.

10 comments:

 1. //திரைப்பட வட்டாரங்களில் எந்திரன் தயாரிப்புக்கும், விளம்பரத்திற்கும் செய்த செலவோடு ஒப்பிட்டால் படம் தோல்விதான் என்று பேசிக் கொள்கிறார்கள்.//

  நூத்துல ஒரு வார்த்தை

  ReplyDelete
 2. இந்திய திரை வரலாற்றிலேயே இதுதான் அதிகம் வசூல் செய்த படம்- அப்படின்னு சொல்றாங்களே சில பதிவர்கள், அது எப்பூடி.....? என்பா எங்களைப் போட்டு குழப்புறீங்க?

  ReplyDelete
 3. இல்லை.... என் தளத்தில் இருந்த கணக்கீடு சரியென பொதுவான தகவல்கள் சொல்கின்றன.... http://goo.gl/3g0Bb

  ReplyDelete
 4. //சென்னையைத்தாண்டி தமிழகம், தென்னிந்தியா, இந்தியா, உலகம் என எந்திரன் அனைத்து இடங்களிலும் வசூல் பட்டையை கிளப்பும் என்திரனது மொத்தவசூல் எவ்வளவாக இருக்குமென்பது இப்போது கணிக்க முடியாது, உலகெங்கிலும் எந்திரன் மொத்தவசூல் குறைந்தபட்சம் 500 கோடிகளை தாண்டுமென்பது எனது நம்பிக்கை.//இப்படியெல்லாம் பகல் கனவு கண்டுகிட்டு இருக்கிறவங்க ஆசையில மண்ணை வாரி போடுறீங்களே, நியாயமா, எப்பூடி....? [அடக் கண்றாவியே, இது வெறும் நம்பிக்கைதானா, நிஜம் இல்லியா? யாருக்காவது நிஜ நிலவரம் தெரிஞ்சா ஆதாரத்தோடு சொல்லுங்கப்பா?]

  ReplyDelete
 5. சந்தேகத்துக்கு இடமில்லாமல் எந்திரன் தமிழ் பட வரலாற்றிலேயே மிகப் பெரிய வெற்றிதான் .. புள்ளி விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்
  Enthiran varavu selavu
  http://inthiya.in/ta/?p=232

  ReplyDelete
 6. ஒருவேளை வசூலில் வெற்றிப்படமாக இருந்தாலும் அது மக்களை முட்டாள் ஆக்கி அடைந்த வெற்றி ஆகும்.

  ReplyDelete
 7. எந்திரன் வெற்றிதான் சார் - மைனாவோடு கம்பர் பண்ணகூடாது.........  எந்திரன் இன்டர்நேஷனல் --- மைனா தமிழ்நாடு மட்டும்.......


  எந்திரன் - தமிழ்நாட்டின் ஒரு மையில் கல்

  ReplyDelete
 8. எந்திரன் வெற்றிப் படம் தான். முன்பெல்லாம் 50 - 75 திரையரங்குகளில் படம் வெளியாகும். எனவே 175 நாள் என்பது சர்வ சாதாரணம். சென்னையில் 5 - 7 திரையரங்குகளில் சுமார் 25-35 காட்சிகள் தினமும் இருக்கும். எந்திரனைப் பொறுத்தவரை 300 - 350 காட்சிகள்வரை ஓடின... எனவே 25 நாட்கள் ஓடுவதே பெரிய விஷயம் தான். ஆனால் சென்னையில் மட்டும் 10 திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்திருக்கிறது எந்திரன்.

  படம் சூப்பர் டூப்பர் ஹிட் தான். ( கலை, ரசனை போன்றவற்றின் அடிப்படையில் அல்ல வெற்றும் கலெக்ஷனின் அடிப்படையில் )

  ReplyDelete
 9. //படம் சூப்பர் டூப்பர் ஹிட் தான். ( கலை, ரசனை போன்றவற்றின் அடிப்படையில் அல்ல வெற்றும் கலெக்ஷனின் அடிப்படையில் )
  //நன்றி பாஸ். முக்கியமா திருட்டு DD -க்கள் அதிகமாகிப் போனதால எந்தப் படமும் அதிக நாளைக்கு ஓடாது என்பது நிஜம். அதனாலதான் அதிக திரையரங்குகுகளில் குறைவான நாட்களில் எல்லா கலெக்ஷனையும் அள்ளுமாறு பார்த்துக் கொள்கிறார்கள்.

  ReplyDelete