படம் நன்றி - தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்
2017-18ல், நாடு முழுவதும் 10,94,543 அரசுப்பள்ளிகள் இருந்தன. 2023ல், இந்த எண்ணிக்கை 10,15,504 ஆக சரிந்து விட்டது. 79,039 அரசுப்பள்ளிகளை மூடிவிட்டார்கள். உத்தரப்பிரதேசம்தான் முதலிடத்தில். அங்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் 27,764 பள்ளிகளை மூடியுள்ளனர். மத்தியப்பிரதேசம்(20,000), ஜார்க்கண்டு(4,600), சத்தீஸ்கர்(1,000), ஆந்திரா(5,400), ஒடிசா(4,589), ஜம்மு காஷ்மீர்(4,380), அசாம்(2,149) என்று இந்த எண்ணிக்கை உள்ளது.கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் ஒரு அரசுப்பள்ளி கூட கேரளாவில் மூடப்படவில்லை. கல்வி சார்ந்த அனைத்து வளர்ச்சிப் புள்ளிகளிலும் தேசிய சராசரியை விட மேலாகத்தான் கேரளா இருக்கிறது.

No comments:
Post a Comment