Monday, September 7, 2009

இதுதான்(ங்க!) அரசாங்கம்...!

நெருக்கடி...
நெருக்கடி...
நெருக்கடி...
இந்த வார்த்தைதான் இன்றைய தினம் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஆட்டம் கண்டால் தென் அமெரிக்க நாடுகள் உருளத் தொடங்கிய காலமும் இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டாலும், சமாளிக்க முடியாத நிலைக்கெல்லாம் தென் அமெரிக்க நாடுகள் போய் விடவில்லை. ஐ.எம்.எப். கடனை ஏன் ஒரே தவணையில் திருப்பிக் கட்டுகிறீர்கள் என்று அர்ஜெண்டினா ஜனாதிபதியைப் பார்த்துக் கேட்டபோது, எங்கள் நாட்டு தலைவிதியை நாங்களே நிர்ணயிக்க விரும்புகிறோம் என்று பதிலளித்தார். அவர் கூறியது ஒரு சில ஆண்டுகளிலேயே நிரூபணம் ஆகிவிட்டது. நெருக்கடி காலத்திலும் அனைத்து தென் அமெரிக்க நாடுகளும் அடிப்படைத்துறைகளில் செய்த செலவைக் குறைக்கவில்லை.
வெனிசுலாவின் தேசிய புள்ளியியல் மையத்தின் தலைவர் எலியாஸ் எல்ஜூரி இதை விளக்குகிறார். உலகப் பொருளாதார நெருக்கடிக் காலகட்டத்தில் தனது வளர்ச்சியை வெனிசுலா தக்க வைத்துக் கொண்டுள்ளது. இயற்கை வளங்களை அன்னிய நிறுவனங்கள் தங்குதடையின்றி அள்ளிக் கொண்டு சென்ற காலத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இயற்கை வளங்கள் சேமிக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மக்களின் நலன்களுக்காக செலவிடப்பட்டது. இந்தக் காலகட்டத்திலும் அந்தச் செலவு குறையவில்லை. கேந்திரத்துறைகளில் அரசின் முதலீடும் குறைக்கப்படவில்லை என்கிறார் எலியாஸ். நாட்டின் இயற்கை வளத்தால் கிடைக்கும் வருமானத்திற்கும், மக்களுக்கும் உள்ள தொடர்பு தற்போதுள்ள அரசின்கீழ் பெருமளவு அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியைச் சந்தித்ததால் பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகளை இழுத்து மூடிய அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் வெனிசுலாவில் உள்ள தொழிற்சாலையைத் திறக்கப்போகிறது. வெனிசுலா மக்களின் வாங்கும் சக்தியில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால்தான் தொழிற்சாலையை மீண்டும் இயக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 140 டாலரைத் தொட்டபோது வெனிசுலாவின் பட்ஜெட் போடப்பட்டது. தற்போது விலை பெரும் அளவில் சரிந்துள்ளதால் பட்ஜெட் கணக்கை சிறிது மாற்றியமைத்துள்ளார்கள். அப்போது ஒதுக்கப்பட்ட அளவிற்கு நிதியை பல்வேறு துறைகளுக்கும் வழங்க முடியாவிட்டாலும் குடியிருப்பு வசதி மற்றும் கல்வி ஆகிய இரண்டுக்குமான ஒதுக்கீட்டில் கைவைப்பதில்லை என்று சாவேஸ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், இந்த இரண்டு துறைகளின் முக்கியத்துவத்தைக் கருதி அரசின் முதலீட்டை அதிகரிக்கப்போகிறார்கள். கடந்த மாதத்தில் புதிய கல்வி மசோதா ஒன்றை வெனிசுலா நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதிலும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தது. 20 சதவிகித நிதியை கல்விக்காக ஒதுக்கி வெனிசுலா அரசு சாதனை பண்ணியுள்ளது. வீட்டு வசதி மற்றும் பொதுப்பணித்துறைக்காக பத்து சதவிகிதமும், 50 சதவிகிதத்தை மாநில மற்றும் உள்ளாட்சி அரசுமைப்புகளுக்கும் ஒதுக்கியுள்ளார்கள். எஞ்சியுள்ள 20 சதவிகிதம் சுகாதாரம் மற்றும் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியை விட நடப்பாண்டில் குறைவாகவே வெனிசுலா அரசு செலவு செய்துள்ளது. இதை சமாளிக்க சிறிதளவு விற்பனை வரியை அரசு விதித்தது.
தற்போது எண்ணெய் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாயின் விலை 40 டாலர் வரை சரிந்த நிலை மாறி தற்போது 65க்கும், 70க்கும் இடையில் அங்குமிங்குமாய் மாறிக் கொண்டிருக்கிறது. வெனிசுலாவின் ஏற்றுமதியில் எண்ணெயின் பங்கு 90 சதவிகிதமாகும். எண்ணெய் விலை சற்றே ஏறியதால் வெனிசுலா அரசுக்கும் நிதி வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால்தான் உடனடியாக வீட்டுவசதி மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு அதிகப்படுத்திவிட்டது. எந்தவித பயனுமின்றி சும்மா கிடக்கும் அரசு மற்றும் தனியார் நிலங்களை அடையாளங்கண்டு அதில் ஏழை மக்களுக்கு குடியிருப்பு வசதியை ஏற்படுத்தித்தர அரசு திட்டம் தீட்டியுள்ளது.
அதேவேளையில் சாமான்ய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, குறைந்தபட்ச ஊதியத்தின் வரம்பையும் உயர்த்தியுள்ளார்கள். குறைந்தபட்ச மாத ஊதியம் 447 டாலர்(22 ஆயிரத்து 350 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று அரசுத்தரப்பில் ஒரு உறுதிமொழியை அளித்தார்கள். கூடிய விரைவில் குறைந்தபட்ச ஊதியத்தில் 20 சதவிகித உயர்வு அளிக்கப்படும் என்பதுதான் அந்த உறுதிமொழி. தற்போதுள்ள மேற்கொண்டுள்ள உயர்வோடு அந்த உறுதிமொழி நிறைவேறிவிட்டது. தென் அமெரிக்க நாடுகளின் மக்கள் இடதுசாரிக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதிகளைத் தேர்ந்தெடுத்தது சரியான முடிவு என்பதையும் இந்த நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

5 comments:

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  2. முக்கியமான பதிவு. நிறைய பேர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். தமிழ்மணத்தில் இன்னும் ஏன் இணைக்கவில்லை?

    ReplyDelete
  3. "தென் அமெரிக்க நாடுகளின் மக்கள் இடதுசாரிக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதிகளைத் தேர்ந்தெடுத்தது சரியான முடிவு என்பதையும் இந்த நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன." - Here in India, we have a Leftist Govt in West Bengal for decades and today the CM, despite his best efforts, is NOT able to open a single industry in his State!! So, do we wish to bring that situation to the whole of India?? A President following Left principles may be good for Venezuela, but that would be dooms day for India.

    ReplyDelete
  4. Dear Gowri,

    Your statistics on West Bengal is wrong. West Bengal is the most favourable destination for Japanese. There are many number industries that have been opened by them. The development in agriculture is incomparable. Again, in Venezuela Chavez is not a Chief Minister for a particular state. He did all these goodwork by making amendmends in Constitution. Here, you know the difference.

    ReplyDelete