Tuesday, January 28, 2014

ஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு...!!!

சர்..சர்ரென்று கார்கள் வந்து ஆம் ஆத்மி அலுவலக வாசலில் வந்து நிற்கின்றன. பல கார்களில் மேலே சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டிருந்தன. ஏராளமான பாதுகாப்புப் படை வீரர்கள் புடை சூழ அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இறங்குகிறார்.

"அரவிந்த் கேஜ்ரிவால் இருக்காரா...?" என்று கேட்டவாறே மள, மளவென்று அலுவலகத்தில் நுழைகிறார்.

ஒபாமா வருகிறார் என்றவுடன் கூட்டத்திலிருந்த கேஜ்ரிவாலும், மற்ற தலைவர்களும் வெளியில் வந்து அவரை அழைத்துச் செல்கிறார்கள். 

கேஜ்ரிவால் - "என்ன திடீரென்று...?

ஒபாமா - "என்னையும் உங்க கட்சில உறுப்பினரா சேத்துக்கிட்டதா செய்தி பார்த்தேன்..."

கேஜ்ரிவால் மற்றவர்களைத் திரும்பிப் பார்க்கிறார்.

மணிஷ் சிசோதியா - "அவரோட ஆபிசுலருந்து மிஸ்டு கால் வந்துருந்துச்சு..." 

ஒபாமா - "பரவாயில்லையே... ஆபிஸ் போன்ல மிஸ்டு கால் குடுத்தாலே உறுப்பினராக்கிருவீங்களா..."

மணீஷ் சிசோதியா - "உங்கள மட்டுமில்ல... உங்க ஆபிஸ்ல உள்ள எல்லாரையும் உறுப்பினராக்கிட்டோம்... இப்ப இந்த அலுவலகத்துக்குள்ள கால் வெச்சதுனால இந்தப் பாதுகாப்புப்படைக்காரங்களையும் உறுப்பினரா சேத்துட்டோம்... போறதுக்குள்ள உறுப்பினர் அட்டை குடுத்துருவோம்..."

அரவிந்த் கேஜ்ரிவால் - "ஆனாலும் நீங்க உறுப்பினராகுறத பரிசீலனை பண்ண வேண்டியிருக்கும்...."

ஒபாமா - "ஏன்..?"

யோகேந்திர யாதவ் - "உங்க கார் மேல சிவப்பு விளக்கு மாட்டிட்டு வந்தீங்கள்ல... அதனாலதான்.."

ஒபாமா -  "விளக்கு மாட்டக்கூடாதா..?"

அரவிந்த் கேஜ்ரிவால் - "லைட்டே இருக்கக்கூடாது.."

திடீரென்று அறையே இருட்டாகியது. ஒபாமாவின் பாதுகாப்புப் பொறுப்பாளர்தான் பாய்ந்து போய் கட்டையைப் பிடுங்கி இருட்டாக்குகிறார். "லைட்டைப் போடுங்க.." என்று ஒபாமாவே அலறியதால் மீண்டும் போடுகிறார்.

ஒபாமா - "இருந்தாலும் உங்க உறுப்பினர் சேர்ப்பு வித்தியாசம்தான்..."

மணிஷ் சிசோதியா - "அது ஏன்... அடுத்த அதிரடியும் வருது... ஆம் ஆத்மின்னு கூட முழுசா சொல்ல வேண்டாம்... ஆ... என்று சொன்னாலே உறுப்பினராக்கிருவோம்." 

குமார் பிஸ்வாஸ் - "இதுக்காக கொசு உற்பத்தி பத்தியும் யோசிக்கிறோம்... கொசு கடிச்சா ஆ..ன்னு கத்துவாங்க... வாயில... சாரி... கைல உறுப்பினர் அட்டைய திணிச்சுருவோம்..."

ஒபாமா - "இந்த சிறுவணிகத்துல அந்நிய முதலீடு வேணாம்னு சொல்லிட்டீங்களே..."

பிரசாந்த் பூஷண் - "பொது வாக்கெடுப்பு நடத்திதான் முடிவு பண்ணினோம்.."

ஒபாமா - "பொது வாக்கெடுப்பா... அப்படி ஒரு செய்தியே வரலயே.."

அரவிந்த் கேஜ்ரிவால் - "அந்த முடிவெடுக்குறப்ப நாங்க அஞ்சு பேரு இருந்தோம்... வாக்கெடுப்பு வெச்சோம்.. ரெண்டு பேரு வேணாம்னாங்க... ஒருத்தர் வேணும்னாரு... குமார் பிஸ்வாஸ் பழங்குடியினரக் கிண்டலடிச்சு ஒரு கவிதை எழுதுறதுல மும்முரமா இருந்தாரு... முடிவே எடுக்க வேணாம்னு நான் நெனச்சேன்..."

ஒபாமா - "உங்க வெளியுறவுத்துறைக் கொள்கை...?"

அரவிந்த் கேஜ்ரிவால் - "தில்லிக்கு வெளியே அரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரானு உறவு நல்லாதான் இருக்கு... உள்துறைதான் பிரச்சனை... பின்னி வேற போட்டிக்கு உண்ணாவிரதம் இருக்கப் போறாராம்.."

ஒபாமா - "இந்தத் தண்ணிக் கட்டணத்தைக் குறைச்சுட்டீங்களே...?"

அரவிந்த் கேஜ்ரிவால் - "எங்களுக்குக்குள்ள பல கருத்து இருக்குல்ல... அதான் எல்லாக் கருத்தையும் நடைமுறைப்படுத்திட்டோம்... விலைக்குறைப்பு, விலையேற்றம், அனைத்து வீடுகளிலும் மீட்டர்னு கருத்து வந்துச்சு.. விலையக் குறைச்சுட்டோம்... இதுதான் சாக்குனு எல்லா வீட்டுக்கும் மீட்டர் மாட்டியாச்சு... நாடாளுமன்றத் தேர்தல் முடிஞ்சா மறுபடியும் விலைய ஏத்திடலாம்.. விலைக்குறைப்பக் காட்டி மீட்டர் மாட்டுனதுனால, இனிமே யாருமே தப்பிக்க முடியாது.. கட்சிக்குள்ளயும் மனக்கசப்பு இருக்காது..."

ஒபாமா - "மின் கட்டணம்....??"

மணிஷ் சிசோதியா - "நாங்க அதக் குறைக்கலேன்னா, இவ்வளவு விலை கூடுனதுக்கு தனியார் மயம்தான் காரணம்னு அம்பலமாகியிருக்கும்... கூட்டுறதுக்கு வேற காரணம் சொல்லிக்கலாம்.. இருக்கவே இருக்கு பட்ஜெட் பற்றாக்குறை..."

ஒபாமாவிற்கு தலை சுற்றியது. "சரி நான் கௌம்பறேன்..." என்றார்.

மணிஷ் சிசோதியா - "வீட்டுக்குப் போன உடனே மறக்காம அந்த லைன்ல இருந்து மிஸ்டு கால் குடுங்க..."

ஒபாமா - "ஏன்..?"

மணிஷ் சிசோதியா - "உங்க மனைவிய உறுப்பினராக்கத்தான்..."

இருந்தால் யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டே இடத்தைக் காலி செய்கிறார் ஒபாமா.

சினிமாக் காட்சி போன்று, அவரது வாகனங்கள் செல்ல, மறுபுறத்திலிருந்து சிவப்பு விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அலறியவாறே வருகின்றன.

அதிலிருந்து இறங்குகிறார் விளாதிமீர் புடின்...

கற்பனை - கணேஷ்

Monday, July 9, 2012

சரிபாதி காலியிடங்கள் - மத்திய பல்கலைக்கழகங்களில்
 தலித் - பழங்குடியினருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் வஞ்சனை
சென்னை, ஜூலை 6 -மத்திய பல்கலைக்கழகங் களில் தலித்துகள்/பழங்குடி யினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களில் ஏறத் தாழ சரிபாதி இடங்கள் நிரப் பப்படாமல் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தலித் மற்றும் பழங் குடி மக்களுக்கு இழைக்கப் பட்ட அப்பட்டமான வஞ் சனை என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி கண் டனம் தெரிவித்துள்ளது.தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தலித்-பழங்குடியினருககு அளிக்கப்பட்டுள்ள மத்திய பல் கலைக்கழக நியமனங்களில் தகுதி வாய்ந்தவர்கள் கிடைக் காததால் 48-50 சதவிகித இடங் கள் நிரப்பப்படாமல் உள்ள தாக அதிகாரபூர்வமாக தெரி விக்கப்பட்டுள்ளது. உண்மை யில் இது தலித் மற்றும் பழங் குடியினருக்கு எதிராக மத்திய பல் கலைக்கழகங்களை நிர் வகிக்கும் மத்திய அரசின் ஓர வஞ்சனையான நடவடிக்கை யாகும்.

இதற்கு தெரிவிக்கப்பட் டுள்ள காரணம் ஏற்றுக் கொள் ளப்பட முடியாததாகும். பல் வேறு கேந்திரமான துறை களில் தலித் மற்றும் பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள் திறமையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, மத் திய பல்கலைக்கழக ஆசிரியர் களுக்கு தகுதிவாய்ந்த தலித்/பழங்குடியினர் கிடைக்க வில்லை எனக்கூறு வது நம்பும் படியாக இல்லை. இப்பதவி களுக்கு தகுதி அடிப் படையில் விண்ணப்பித்த தலித்/பழங்குடி பிரிவினரில் சிறந்த ஒரு பகுதி யினரை தேர்வு செய்து நிய மனம் செய்திருக்க வேண்டி யது மத்திய அரசின் கடமை யாகும். இக்கடமையை நிறை வேற்ற மத்திய அரசு தவறி யுள்ளது. தமிழகத்திலும் இந்தியா முழுவதும் தலித் மற்றும் பழங் குடியினருக்கு எதிரான சமூக அநீதி பலவகைகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு உரிய சட்டப் பூர்வமான வாய்ப்புகள் முழு மையாக அமல்படுத்தப்படுவ தில்லை என்பது மட்டுமல்ல, இவர்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமீபத் தில் தமிழகத்திற்கு வந்த மத்திய சமூகநலத்துறை அமைச்சர், தமிழகத்தில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் எந்த அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்த கூட் டத்தில் கலந்து கொண்டு விட்டு வன்கொடுமை செய்த குற்ற வாளிகள் மிகக்குறைந்த சத விகிதத்திலேயே தண்டிக்கப் பட்டுள்ளதாகவும், ஏராள மான வன்கொடுமை வழக்கு கள் உரிய முறையில் நடத்தப் படாமல் தேங்கிக் கிடப்பதாக வும் தகவல் தெரிவித்துள்ளார். வன்கொடுமைத் தடுப்புச்சட் டத்தை தமிழக அரசு அமல் படுத்தும் விதம் கண்டனத்திற் குரியதாகும். ஆயினும் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழு வதும் இத்தகைய நிலை தொடர்கிறது என்பதையே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின் றன. தலித்-பழங்குடி மக்க ளுக்கு எதிராக சாதிய சக்திகள் பல்வேறு வடிவங்களில் வன் கொடுமைகளை ஏவும்போது அதைத் தடுத்து நிறுத்த வேண் டியது மத்திய,மாநில அரசு களின் கடமையாகும்.

நாடு விடு தலையடைந்து 60 ஆண்டுக ளாகியும் இக்கடமையை மத் திய, மாநில அரசுகள் நிறை வேற்றவில்லை என்பதே உண் மையான நிலவரமாகும்.இப்பின்னணியில்தான் அரசு நிர்வாகமும், தன் பங் கிற்கு தலித்/பழங்குடியினருக்கு சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய முழு வாய்ப்பையும் உரிமையையும் தர மறுத்துள் ளது என்பதை மத்திய பல் கலைக்கழக ஆசிரியர் நியமனப் பிரச்சனையில் காண முடி கிறது. மத்திய அரசின் இத்த கைய சட்டவிரோத மற்றும் சமூக நீதிக்கு எதிரான செயல் பாட்டை தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி வன் மையாகக் கண்டிக்கிறது. மேலும் காலதாமதமில்லாமல் தலித்/பழங்குடியினருக்கான பல் கலைக்கழக ஆசிரியர் நியமன இடஒதுக்கீட்டின் படி காலி யிடங்களை முழுமையாக நிரப்பு மாறு மத்திய அரசை தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

குறிச்சி சில்வர் ஜூப்லி தலித் மக்களுக்கு பட்டா!
பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையில் போராட முடிவு
கோவை, ஜூலை 8-குறிச்சி சில்வர் ஜூப்லி தலித் குடியிருப்புகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் போராட்டம் நடத் துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது. கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட் பட்ட 95-வது வட்டத் திலும், முந்தைய குறிச்சி நகராட்சியின் 3வது வார்டு பகுதியிலும் அமைந்திருப்பது சில்வர் ஜூப்லி பகுதி. இப்பகுதியில் நத்தம் புறம்போக்கு, வண்டிபுறம்போக்கு, வாய்க்கால் புறம்போக்கு என புறம்போக்கு நிலங்கள் உள்ளது. இங்கு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேவேந்திரகுலம், ஆதிதிராவிடர், அருந்ததியர் என நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட தலித் குடும் பத்தினர்கள் வசித்து வரு கின்றனர். ஆனால், இங்கு ஆறுபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தாலும் வீட்டுமனைப்பட்டா என் பது இதுவரை வழங்கப் படவில்லை. இங்குள்ள வீடுகளுக்கு 1959, 1965, 2000, 2001 ஆகிய ஆண்டுகளில் சிறுக, சிறுக 40 பேருக்கு மட்டுமே இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப் பட்டுள்ளது. மீதியுள்ள குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே, இலவச வீட்டுமனைப்பட்டா கோரி சட் டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள், தாசில்தார்கள் என பலரி டம் மனு அளித்தும் பல னில்லை. மேலும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு இயக்கங் கள் பட்டா கேட்டு நடத் தப்பட்டது. இதனிடையே, அதிமுக அரசு தற்போது பொறுப்பேற்ற பின்னர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான செ.தாமோதரனிடம் இப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். அப்போது இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். ஆனால், அமைச்சராக பொறுப்பேற்ற பின்னரும் கூட இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங் கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பகுதிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் சனியன்று சென்றபோது, அப்பகுதி மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன்பின். இப்பகுதி மக்க ளின் பட்டா பிரச்சனைக் காக நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன் முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திப் பது, கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க வலி யுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வின்போது. சிபிஎம் கோவை தெற்கு தாலுகா செயலாளர் எஸ்.கருப்பையா, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.பி.இளங் கோவன், சிஐடியு தாலுகா செயலாளர் பி.ரவிச் சந்திரன், குறிச்சி பகுதி சிபி எம் கிளை செயலாளர்கள் சௌபாக்யவதி, சுரேஷ், ரங்கசாமி மற்றும் மைக் கேல் ராஜ், ஜீவா உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
தலித் மாணவனுக்கு மார்க்சிஸ்ட் கட்சி உதவி


நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட லிங்கித்தடி பகுதியைச் சேர்ந்த தலித் ஏழை மாணவர் ப.முருகானந்தம், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு எம்பிபிஎஸ் படிக்கத் தேர்வாகியிருக்கிறார். அவருடைய கல் விக்கும் திறமைக்கும் ஊக்கம் அளிக்கும் வண்ணம், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக் குழு சார்பில் சனிக் கிழமையன்று, கட்சித் தலைவர்கள், மாணவரின் இல்லம் சென்று அவரிடம் ரூ.20ஆயிரம் வழங்கிப் பாராட்டினர்.


தலித் வகுப்பைச் சேர்ந்த மிக ஏழ்மை நிலையில் உள் ளது மாணவர் முருகானந்தம் குடும்பம்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாய் இறந்துவிட்டார்.தந்தை பக்கிரிசாமி, விவசாயக் கூலி வேலை செய்பவர். சங்கீதா, சரண்யா, வேம்பரசி என்று மூன்று சகோதரிகள். இதில், சரண்யா பி.ஏ. தமிழ் படித்து வருகிறார்.தன் தந்தையோடு சேர்ந்து, மாணவர் முருகா னந்தமும் கூலி வேலைக்குச் சென்று கடுமையாக உழைப் பார். இப்படி கூலி வேலை செய்து கொண்டே முருகானந்தம், தலைஞாயிறு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்து, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் 500-க்கு 451 மதிப்பெண்கள் பெற்றுப் பாராட்டுதலைப் பெற்றார். பட்டுக்கோட் டை லாரல் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து, முருகானந்தம் முதல் குரூப் எடுத்து பிள 2 படித்தார். இவ்வாண்டு +2 பொதுத் தேர்வில் 1140 மதிப் பெண்கள் பெற்றார். மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் கட் ஆப் மதிப்பெண்கள் 199.5 பெற் றார்.தேர்வு பெற்ற முதல் 100 மாணவர்களுள் இவரும் ஒருவர் என்பதால் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு இவ ருக்கு இடம் கிடைத்துள்ளது. ஆனால், ஏழ்மை நிலை யில் உள்ள அவர், தொட ர்ந்து மருத்துவக் கல்வியைப் படிப்பதற்கு உதவும் நல்ல நோக்கத்தில்தான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், நாகை மாவட்டக் குழு, இந்த நிதியை வழங்கியுள் ளது. சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஏ.வி.முருகை யன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், மாநிலக்குழு உறுப்பினருமான வி.மாரி முத்து, கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி, மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் வி.சுப் பிரமணியன், வி.அமிர்தலிங் கம், தலைஞாயிறு சி.பி. எம். ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு மற்றும் எஸ்.முரு கேசன், கே.அலெக்சாண் டர் உள்ளிட்டோர் மாண வர் முருகானந்தத்திற்கு நிதியளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Wednesday, December 28, 2011

உச்சி முகர அமெரிக்கர்கள் விரும்பினால்...!!

போராளி

கடந்த ஆண்டில்(2010-11) மட்டும் பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்த வருமானம் 4.6 லட்சம் கோடி ரூபாயாகும். மானியங்கள் பற்றி இந்தப் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் வாய்கிழியப் பேசுகின்றன. சாமான்ய மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் ஓட்டையைப் போட்டு விடுகிறது என்று பக்கம், பக்கமாக எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் மிக, மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள பெரும் பணக்காரர்களுக்குத் தரப்படும் மானியம், ஒட்டுமொத்த மக்கள் தொகைக்குக் கிடைக்கும் மானியத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

சுங்க மற்றும் கலால் வரி விதிவிலக்குகள் மூலம் 3 லட்சத்து 73 கோடி ரூபாயும், லாபத்தின் மீதான வரியில் விலக்கு அளித்ததால் 88 ஆயிரம் கோடி ரூபாயும் பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வருமானமாகப் போய்ச் சேர்ந்தது. இதைத்தாண்டி, 2009-10 ஆம் ஆண்டில் தரப்பட்ட சலுகைகளும் தொடர்கின்றன. ஒட்டுமொத்த தேச மக்களுக்கு உணவு, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றிற்காக மத்திய அரசு தரும் மானியம், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில்(2011-12) பத்தாயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.

பல பிரச்சனைகளை எடுத்து முழங்கிக் கொண்டிருக்கும் போராளிகள், இதுபற்றி வாய் திறப்பதில்லை. இடதுசாரிக்கட்சிகள் மட்டுமே இதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. உண்மையான போராளிகளான தொழிலாளர்கள் இந்தக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். மீண்டும் பிப்ரவரி 28 அன்று அனைத்துப்பகுதி மக்களோடு இணைந்து இத்தகைய கொள்ளைகளுக்கு எதிராக அவர்கள் களமிறங்குகிறார்கள்.

ஆண்டு சலுகையின் மதிப்பு(ரூபாயில்)
2008-09 4.20 லட்சம் கோடி
2009-10 4.37 லட்சம் கோடி
2010-11 4.60 லட்சம் கோடி

--

மௌன குரு

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருப்பதாகத் தொடர்ந்து பெருமிதப்பட்டுக் கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள். 2011-12 நிதியாண்டின் முதல் காலாண்டில் பட்ஜெட் பற்றாக்குறை 74 ஆயிரத்து 730 கோடி ரூபாயாக இருந்தது. நிதியாண்டு இறுதியில் இது 2 லட்சத்து 86 லட்சமாக அதிகரிக்கப் போகிறது. மத்திய ரிசர்வ் வங்கிதான் இதைத் தெரிவித்துள்ளது. தங்களின் பொருளாதாரக் கொள்கை அற்புதங்களை நடத்தப் போகிறது என்று முரசடித்த மன்மோகன்சிங் மவுனகுருவாகவே காட்சியளிக்கிறார். வெளிநாடுகளுக்குச் சென்றால்தான் அவர் பேசுகிறார். இல்லையேல், நாட்டுக்குள் நுழையும் முன்பாக அவசர, அவசரமாக விமானத்தில் வைத்தே பேட்டி தருகிறார்.

-------------

உச்சிதனை முகர்ந்தால்...

அமெரிக்க ஏழைகளுக்கு மானிய விலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் வழங்கும் பணியை வெனிசுலா துவங்கியுள்ளது. இந்தப் பணி ஏழாவது ஆண்டாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. குளிர்காலத்தில் கடும் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வீடுகளில் எரிபொருளின் உதவியால் சூட்டை உருவாக்கிக் கொள்வது வழக்கம். ஆனால் எரிபொருள் விலை எகிறிப் போய் இருப்பதால் ஏழைகளால் இந்த வழக்கத்தைக் கடைப்பிடிப்பது சிரமமானதாக இருந்து வந்தது.

இந்நிலையில்தான் இவ்வாறு சிரமப்படுபவர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு உதவி செய்ய வெனிசுலா முன்வந்தது. வெனிசுலாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பி.டி.வி.எஸ்.ஏ.வின் துணை நிறுவனமான சிட்கோ அமெரிக்காவில் இயங்கி வருகிறது. ஒரு காலத்தில் அமெரிக்காவில் கிடைக்கும் லாபத்தில் ஒரு ரூபாய் கூட வெனிசுலாவிற்கு அனுப்பாமல் இருந்த சிட்கோ நிறுவனம், சாவே° ஜனாதிபதியான பிறகு இந்நிறுவனம் சீரமைக்கப்பட்டு, அதன் வருமானம் வெனிசுலா மக்களுக்கு வந்து சேர வழிவகுக்கப்பட்டது.

இந்த சிட்கோ நிறுவனம் மூலமாகத்தான் மானிய விலையில் எரிபொருளை மக்களுக்குத் தருகிறார்கள். வரும் ஆண்டில் 4 லட்சம் அமெரிக்க ஏழைகள் இந்த எரிபொருளைப் பெற்றுக் கொள்ளவிருக்கிறார்கள். அமெரிக்காவை ரோஜாப் பூந்தோட்டம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஏராளமானவர்கள் வறுமையால் வாடுகிறார்கள் என்கிறார் எண்ணெய் வளத்துறை வல்லுநர் எலியோ ஓஹெப்.
2005 ஆம் ஆண்டில் துவங்கிய இந்த மானிய விலையில் எண்ணெய்த் திட்டத்திற்கு இதுவரையில் 2 ஆயிரம் கோடி ரூபாயை வெனிசுலா செலவிட்டுள்ளது.

ஒருவேளை தங்களுக்கிடைத்த உதவிக்காக யாரையாவது உச்சி முகர அமெரிக்கர்கள் விரும்பினால், அது வெனிசுலாவின் உச்சியாகவே இருக்கும்.

---

Saturday, December 10, 2011

“கேரளத்துக்குப் பாதுகாப்பு; தமிழ் நாட்டுக்குத் தண்ணீர்”

தமிழக - கேரள மக்களிடையே நிலவும் சகோதர உறவுக்கு தீங்கு விளைவிக்கும் போராட்டங்களில் ஈடுபடும் காங்கிரஸ் - பாஜக கட்சியினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 7ந்தேதி கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கேரள - தமிழ்நாடு மக்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிற சகோதர உறவுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவித்துவிடக்கூடாது. இரு மாநில அரசுகளும் மத்திய அரசும் பயனுள்ள வகையில் தலையிட்டு, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்குக் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும்.

இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்தி, சில அரசியல் இயக்கங்களின் பிரதேச ஊழியர்களும் வன்முறைச் சக்திகளும் தவறான முறையில் செயல்பட்டு, நிலைமையை மோசமாக்குவது துரதிருஷ்டமாகும்.எல்லையில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சியினர் தவறான போராட்ட முறைகளைக் கையாள்வதானது தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகளுக்கு எதிராக வன்முறைச் சக்திகள் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டுக்கான தண்ணீருக்கு நஷ்டம் ஏற்படுத்த குமுளியில் ஷட்டரைத் தகர்ப்பது என்ற வக்கிரமான போராட்டத்தையே இளைஞர் காங்கிரஸ்காரர்கள் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, மலையாளிகளின் வாகனங்களைத் தடுப்பது, அவர்களின் கடைகளை எரிப்பது, மலையாளத் தம்பதிகளைத் தாக்குவது முதலான - முற்றிலும் கண்டிக்கத்தக் கதும் எதிர்க்கத்தக்கதுமான சம்பவங்கள் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் நிகழ்ந்தன.

அடுத்த மாநிலத்தவரின் நடமாடும் சுதந்திரத்தையோ, இயல்பான வாழ்க்கை யையோ தடுக்கிற எந்த முயற்சியும் தாக்கு தலும் தமிழ்நாட்டிலோ, கேரளத்திலோ நிகழ்வதைக் கடுமையாக ஒடுக்க வேண்டும். இத்தகைய வன்முறைச் சக்திகளைத் தனிமைப்படுத்த அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்பவர்களைத் தடுத்திட இரு மாநிலங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரி ஊழியர்களும் ஜனநாயக சக்தி களும் களம் இறங்க வேண்டும். சபரிமலைக்குச் செல்கிற அடுத்த மாநி லங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர்க்கு அனைத்துவிதப் பாதுகாப்பும் வழங்குவதற்கு அரசு மட்டுமல்லாமல் கட்சி ஊழியர்களும் களமிறங்க வேண்டும்.

நெருக்கமான பக்கத்து மாநிலத்தவர்களாக வாழ்கிற கேரளத்தையும் தமிழ் நாட்டையும் சேர்ந்த மக்கள் இந்த இரு மாநிலங்களிலும் பணி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இரு மாநில மக்களும் பரஸ்பரம் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது உண்டு. இந்த வாழ்க்கை முறையைச் சீர்குலைக்க வரும் எதையும் இரு மாநிலங்களையும் சேர்ந்த அறிவார்ந்த மக்கள் அனுமதிக்கக்கூடாது.

“கேரளத்துக்குப் பாதுகாப்பு; தமிழ் நாட்டுக்குத் தண்ணீர்” என்பதே முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளம் எழுப்புகிற பொது முழக்கம். விவேகமற்ற போராட்டமும் வன்முறைகளும் இந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்து வதற்கான முயற்சிக்குப் பலத்த அடியாகி விடும். இவற்றை அடக்கவும், அமைதி காக்கவும், தமிழர் - மலையாளி என்கிற பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.

Sunday, December 4, 2011

தகர்ந்தது சங்ககிரி தீண்டாமைச்சுவர்!



சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டத்திற்கு வெற்றி


சேலம் மாவட்டம் சங்ககிரி சன்னியாசிப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட தீண்டாமைச்சுவர், அப் பகுதி அருந்ததிய மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டங்களால் இடிக்கப்பட்டது.

சங்ககிரியிலிருந்து ஈரோடு செல்லும் பிரதான சாலையில் இந்த சன்னியா சிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. சுமார் 450 அருந்ததிய மக்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஊராட்சி தலைவராக இருந்து வந்துள்ளனர். இம் முறை பொது ஊராட்சியாக மாற்றப்பட்டதால், மற்ற சமூகத்தினரின் ஆதரவுடன் மகேஸ்வரி என் பவர் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றிக்குப் பிறகு அருந்ததிய மக்களுக்கு பல் வேறு தொல்லைகள் துவங்கின. அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்படுவதில்லை. இந்நிலையில் தான் இந்த மக்கள் பேருந்து நிறுத்தத்திலிருந்து தங்கள் பகுதியை அடைவதற்காகப் பயன்படுத்தி வந்த தார்ச் சாலையின் குறுக்கே திடீ ரென்று சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. நவம்பர்29 ஆம் தேதி கட்டப்பட்ட இந்த சுவரின் கட்டுமானப்பணி யை ஊராட்சித்தலைவர் மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட பலர் மேற்பார்வை செய்ததாக அருந்ததிய மக்கள் கோட்டாட்சியரிடம் புகார் செய்தனர்.

இந்தத் தீண்டாமைச்சுவர் அகற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்களோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டங்களைத் துவக்கின. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் அ. சவுந்தரராசன், மாவட்டச் செயலாளர் ஆர். வெங்கடபதி உள்ளிட்ட தலைவர்கள் தீண்டாமைச் சுவரைப் பார் வையிட்டதோடு, மக்கள் நடத்திய போராட்டத்திலும் இணைந்து கொண்டனர். அதிகாரிகளைச் சந்தித்த அ.சவுந்தரராசன், தீண்டாமைச் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுவர் இடிப்பு

உறுதியான போராட்டத்தால் டிசம்பர் 4 ஆம் தேதியன்று காலை சங்ககிரி தாசில்தார் தலைமையில் வந்த அரசு ஊழியர்கள் பொதுச் சாலையை ஆக்கிர மித்துக் கட்டப் பட்டிருந்த தீண்டாமைச் சுவரை இடித்து தரை மட்டமாக்கினர். மீண் டும் மக்கள் பயன்படுத்தும் வண்ணம் பாதை அமைக்கப்பட்டது.

போராடிய மக்களை நேரில் சந்தித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.நர சிம்மன், செயலாளர் ஆர். குழந்தைவேல், உதவி செய லாளர் என்.பிரவீண்குமார் , மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.