Tuesday, October 27, 2026

பெருசு கண்ணா பெருசு;ஆனா ஆயுசு கம்மி..

இந்த சிலைதான் இந்தியாவிலேயே உயரமான பிள்ளையார் சிலையாகும். 69 அடி உயரம் உள்ள இந்த சிலை தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத் என்ற இடத்தில் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி உருவாக்கப்படும் இந்த சிலை பத்து நாட்கள் கழித்து உசேன் சாகர் ஏரியில் கரைக்கப்பட்டு விடுகிறது. மீண்டும் அடுத்த ஆண்டு பெரிய சிலை உருவாகும். முதன்முதலில் 1954ல்தான்  இந்த இடத்தில் சிலை வைத்தனர். அப்போது அதன் அளவு 1 அடி ஆகும். 

70வது  ஆண்டைக் கொண்டாடும் வகையில் 2024 ஆம் ஆண்டில் 70 அடி உயரத்திற்கு சிலை வைத்திருந்தனர்.