Wednesday, March 10, 2010

தேங்கிய வழக்குகளை தீர்க்க 320 ஆண்டுகள்...!!


தற்போதுள்ள நிலையில் நாடு முழுவதும் தேங்கிக்கிடக்கும் வழக்குகளைத் தீர்க்க இந்திய நீதித்துறைக்கு 320 ஆண்டுகள் ஆகும் என்று ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி வி.வி.எஸ்.ராவ் கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளையும் சேர்த்து நாடு முழுவதுமுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 3 கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாமலும், அப்பாவிகளுக்கு நீதி கிடைக்காமலும், கிடைக்க வேண்டிய தண்டனையை விட கூடுதல் தண்டனை அனுபவிப்பதும் தொடர்கதைகளாகி உள்ளன. ஆந்திரப் பிரதேச நிர்வாகத் தீர்ப்பாயக் கூட்டமொன்றில் பேசிய வி.வி.எஸ்.ராவ், இந்திய நீதித்துறையில் தேங்கிக் கிடக்கும் அனைத்து வழக்குகளையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாட்டிலுள்ள ஒவ்வொரு நீதிபதியின் வசமும் சராசரியாக 2 ஆயிரத்து 147 வழக்குகள் இருக்கும் என்கிறார். இந்த சராசரி ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

இதற்குப் பிரதான காரணம், அனைத்துத்துறைகளிலும் சொல்லப்படும் ஆட்பற்றாக்குறை என்ற அதே காரணம்தான். அரசால் ஒப்புதல் தரப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 641 ஆகும். இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 630 என்பதும் அடங்கும். ஆனால் தற்போது வெறும் 14 ஆயிரத்து 576 நீதிபதிகள்தான் உள்ளனர். பத்து லட்சம் பேருக்கு 10.5 நீதிபதிகள் என்கிற முறையில் நாட்டின் நீதித்துறையின் நிலைமை உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி வி.வி.எஸ்.ராவ், 2002 ஆம் ஆண்டிலேயே இது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பத்து லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்பதே சரியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது என்கிறார்.

மேலும் பேசிய அவர், 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாகவோ அல்லது 170 கோடியாகவே இருக்கும். பத்து லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்பது அப்போது நிறைவேறினால் நீதிபதிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துவிடும். ஆனால் அவர்கள் கைவசமோ 30 கோடி வழக்குகளுக்கு மேல் இருக்கும். எழுத்தறிவு விகிதம் மற்றும் விழிப்புணர்வு அதிகரிப்பதால் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. கேரளாவை இதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டலாம். மக்கள் தொகையின் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் சராசரியாக 28 புதிய வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகி வருகின்றன என்று குறிப்பிட்டார்.

5 comments:

  1. மிக்க அருமையான பதிவு. நீதித்துறை போக்கிடமற்ற முட்டுச்சந்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் நீதிபதி வி,வி.எஸ்.ராவ். ஆட்பற்றாக்குறையால் எண்ணற்ற நிரபராதிகள் சிறைச்சாலைகளில் விசாரணை ஏதுமின்றி அடைபட்டுக் கிடக்கிறார்கள்; எண்ணற்ற குற்றவாளிகள் (white caller criminals) விசாரித்துத் தண்டிக்கப்படாமல் இருப்பதால் மேலும் மேலும் சமூகத்தை சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள். சரியாகச் சொல்லியுள்ளீர்கள். ஆனால் ஆட்பற்றாக்குறை நீதித் துறையைப் பிடித்துள்ள (பீடித்துள்ள) ஒரு நோய்தான். ஆட்பற்றாக்குறை என்ற நோயைத் தீர்த்துவிடலாம். ஊழல் என்கிற புற்றுநோயைத் தீர்க்க மருந்து இல்லை.இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete
  2. The Hon'ble Judge missed to see one vital link in his speech. In future, rowdyism will become so high in India and every local goon will have their own "katta panchayat" - this in turn will reduce the number of cases getting stagnated at Courts !! Jai Hind !!

    ReplyDelete
  3. It might seem that the situation is going out of hand. CPI(M) branch secretary, Veluchamy, in Pallipalayam has been murdered by the local goons. He was taking up every people's issue vigorously. That was the reason behind the murder. Our responsibility is to take the struggle forward where Veluchamy had left. CPI(M) and its cadres are firm in that.

    ReplyDelete
  4. Yep.. I read about the murder of Veluchamy. My heart goes out to his family members. This is exactly what I said in my comment above. People fighting for honesty, truth and justice will be killed by local goons and barring one or two almost all political parties thrive on such goondas. We are heading towards anarchy !! Money power and goondaism will rule our nation. This DMK govt is a trend setter in all such things.

    ReplyDelete
  5. Dear Ganesh,

    Today only I had a chance to visit your blogspot. Is the CPI(M)going to do something to the 3 children of Veluchamy? I would also like to donate to this cause. Please advise me how to do this?

    ReplyDelete