சரிபாதி காலியிடங்கள் - மத்திய பல்கலைக்கழகங்களில்
தலித் - பழங்குடியினருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் வஞ்சனை
தலித் - பழங்குடியினருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் வஞ்சனை
சென்னை, ஜூலை 6 -மத்திய பல்கலைக்கழகங் களில் தலித்துகள்/பழங்குடி யினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களில் ஏறத் தாழ சரிபாதி இடங்கள் நிரப் பப்படாமல் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தலித் மற்றும் பழங் குடி மக்களுக்கு இழைக்கப் பட்ட அப்பட்டமான வஞ் சனை என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி கண் டனம் தெரிவித்துள்ளது.தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தலித்-பழங்குடியினருககு அளிக்கப்பட்டுள்ள மத்திய பல் கலைக்கழக நியமனங்களில் தகுதி வாய்ந்தவர்கள் கிடைக் காததால் 48-50 சதவிகித இடங் கள் நிரப்பப்படாமல் உள்ள தாக அதிகாரபூர்வமாக தெரி விக்கப்பட்டுள்ளது. உண்மை யில் இது தலித் மற்றும் பழங் குடியினருக்கு எதிராக மத்திய பல் கலைக்கழகங்களை நிர் வகிக்கும் மத்திய அரசின் ஓர வஞ்சனையான நடவடிக்கை யாகும்.
இதற்கு தெரிவிக்கப்பட் டுள்ள காரணம் ஏற்றுக் கொள் ளப்பட முடியாததாகும். பல் வேறு கேந்திரமான துறை களில் தலித் மற்றும் பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள் திறமையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, மத் திய பல்கலைக்கழக ஆசிரியர் களுக்கு தகுதிவாய்ந்த தலித்/பழங்குடியினர் கிடைக்க வில்லை எனக்கூறு வது நம்பும் படியாக இல்லை. இப்பதவி களுக்கு தகுதி அடிப் படையில் விண்ணப்பித்த தலித்/பழங்குடி பிரிவினரில் சிறந்த ஒரு பகுதி யினரை தேர்வு செய்து நிய மனம் செய்திருக்க வேண்டி யது மத்திய அரசின் கடமை யாகும். இக்கடமையை நிறை வேற்ற மத்திய அரசு தவறி யுள்ளது. தமிழகத்திலும் இந்தியா முழுவதும் தலித் மற்றும் பழங் குடியினருக்கு எதிரான சமூக அநீதி பலவகைகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு உரிய சட்டப் பூர்வமான வாய்ப்புகள் முழு மையாக அமல்படுத்தப்படுவ தில்லை என்பது மட்டுமல்ல, இவர்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமீபத் தில் தமிழகத்திற்கு வந்த மத்திய சமூகநலத்துறை அமைச்சர், தமிழகத்தில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் எந்த அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்த கூட் டத்தில் கலந்து கொண்டு விட்டு வன்கொடுமை செய்த குற்ற வாளிகள் மிகக்குறைந்த சத விகிதத்திலேயே தண்டிக்கப் பட்டுள்ளதாகவும், ஏராள மான வன்கொடுமை வழக்கு கள் உரிய முறையில் நடத்தப் படாமல் தேங்கிக் கிடப்பதாக வும் தகவல் தெரிவித்துள்ளார். வன்கொடுமைத் தடுப்புச்சட் டத்தை தமிழக அரசு அமல் படுத்தும் விதம் கண்டனத்திற் குரியதாகும். ஆயினும் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழு வதும் இத்தகைய நிலை தொடர்கிறது என்பதையே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின் றன. தலித்-பழங்குடி மக்க ளுக்கு எதிராக சாதிய சக்திகள் பல்வேறு வடிவங்களில் வன் கொடுமைகளை ஏவும்போது அதைத் தடுத்து நிறுத்த வேண் டியது மத்திய,மாநில அரசு களின் கடமையாகும்.
நாடு விடு தலையடைந்து 60 ஆண்டுக ளாகியும் இக்கடமையை மத் திய, மாநில அரசுகள் நிறை வேற்றவில்லை என்பதே உண் மையான நிலவரமாகும்.இப்பின்னணியில்தான் அரசு நிர்வாகமும், தன் பங் கிற்கு தலித்/பழங்குடியினருக்கு சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய முழு வாய்ப்பையும் உரிமையையும் தர மறுத்துள் ளது என்பதை மத்திய பல் கலைக்கழக ஆசிரியர் நியமனப் பிரச்சனையில் காண முடி கிறது. மத்திய அரசின் இத்த கைய சட்டவிரோத மற்றும் சமூக நீதிக்கு எதிரான செயல் பாட்டை தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி வன் மையாகக் கண்டிக்கிறது. மேலும் காலதாமதமில்லாமல் தலித்/பழங்குடியினருக்கான பல் கலைக்கழக ஆசிரியர் நியமன இடஒதுக்கீட்டின் படி காலி யிடங்களை முழுமையாக நிரப்பு மாறு மத்திய அரசை தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.